அஸ்ஸிராஜூல் முனீர் அரபிக் கல்லூரி
திருப்பூர் மாவட்டத்திற்கே பெருமை சேர்க்கும் வகையில் திருப்பூரின் மையப்பகுதியில் முஸ்லிம்கள் நிறைந்த மஹல்லாவான பெரிய கடைவீதி பெரிய பள்ளிவாசலில் அமைந்துள்ள மதரஸா அஸ்ஸிராஜுல் முனீர் அரபிக்கல்லூரியைப் பற்றி பேராசிரியர் முஹம்மது அலி ஜின்னாஹ் சிராஜி அவர்கள் தந்த குறிப்புகளின் அடிப்படையில் சில தகவல்களை அறிய!
மேலும் படிக்க...
அஸ்ஸிராஜுல் முனீர் அரபிக்கல்லூரியின் துவக்கம்
அஸ்ஸிராஜுல் முனீர் அரபிக்கல்லூரி துவங்குவதற்கு சில ஆண்டுகளுக்கு முன்பு மெளலானா A. முஹம்மது ஃபாரூக் ஹழ்ரத் பெருந்தகை அவர்கள் பெரிய பள்ளி வாசலின் இமாமாக இருந்தார்கள். அப்போது அவர்களின் மனதில் இப்பள்ளிவாசலில் எப்படியேனும் ஒரு அரபிக்கல்லூரி தொடங்க வேண்டும் என்ற எண்ணம் இருந்ததால் ஆர்வமுள்ள சிலரை வைத்து அவர்களே முதலாம் ஜும்ரா பாடத்தை நடத்தியுள்ளார்கள். அவர்களிடம் பயின்றவர்கள்தான் திருப்பூர் அஸ்ஸிராஜுல் முனீர் அரபிக்கல்லூரியின் கண்ணியமிகு முன்னாள்பேராசிரியர் S.G.அஹ்மதுல்லாஹ் ஹழ்ரத் கிப்லா, திருப்பூரைச் சேர்ந்த மெளலானா முஸ்தஃபா ஹழ்ரத், திருப்பூர் மாவட்ட காஜி மெளலவி இல்யாஸ் ஹழ்ரத் ஆகியோர் ஆவார்கள்.
மேலும் படிக்க... |